தலிபான் முக்கிய புள்ளி உட்பட 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் ஃபர்யாப் பகுதியில், அந்நாட்டின் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தலிபான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 10 பேர் கொலை செய்யப்பட்டனர். அந்த அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரும் இதில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
 | 

தவுலத் அபாத் என்ற ஊரில், தலிபான் தீவிரவாதிகள் ஒன்று கூடுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இதில், தலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர், அந்த பகுதியில் இயங்கி வரும் தலிபானின் முக்கிய கமேண்டர் நஸ்ரத்துல்லா, என தெரிய வந்துள்ளது. இது அந்த அமைப்புக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக, ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தலிபான் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP