Logo

தனக்கு எதிரான போராட்டத்திற்கு பதிலளித்த இம்ரான் கான்!!

இம்ரான் கான் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் பாகிஸ்தானின் நிலை மோசமடைந்தது எனக் கூறி, அவருக்கு எதிராக "ஆஸாதி" பேரணியில் ஈடுபட்டிருக்கும் எதிர்கட்சிகளுக்கும், மத அமைப்புகளுக்கும் பதிலளித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.
 | 

இஸ்லாமாபாத்தில் இம்ரான் கானிற்கு எதிராக பேரணி நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில், கில்கிட் பல்திஸ்தான் பகுதியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான், "வெவ்வேறு லட்சியங்களும் குறிக்கோள்களும் கொண்ட இவர்கள் என்னை பற்ற கருத்துக்கள் தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது.

ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான் உள்ளவரை பாகிஸ்தானிற்கு எதிரி வெளியில் இருந்து வர வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த பேரணி இந்திய ஊடகங்களுக்கு கிடைத்த ஜாக்பாட் என்பதால் மவுலானா பஸ்லுர் ரஹ்மான் இந்தியராக இருக்குமோ என்ற எண்ணம் எழுகிறது" என்று அவருக்கு எதிராக பேரணி மேற்கொள்பவர்களை வெகுவாக தாக்கியுள்ளார்.

மேலும், மதத்தை பயன்படுத்தி ஆட்சியை பிடித்த காலங்கள் எல்லாம் கரையேறி விட்டதாகவும், எத்தனை நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும், அவர்களின் கையிலிருக்கும் உணவு தீர்ந்து போகும்போது உணவு அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP