மசூத் அசார் விவகாரம் : வரும்... ஆனா வராது...பாணியில் செயல்படும் சீனா !

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா சப்பைக்கட்டு கட்டியுள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் முயற்சிகளை மழுங்கடிக்கும் ராஜ்ஜியரீதியான நடவடிக்கையாகவே சீனாவின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
 | 

மசூத் அசார் விவகாரம் : வரும்... ஆனா வராது...பாணியில் செயல்படும் சீனா !

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா சப்பைக்கட்டு கட்டியுள்ளது. இந்த விஷயத்தில் தமது நிலைப்பாட்டை உலக அரங்கில் வெளிச்சம் போட்டு காட்டிவரும் இந்தியாவின் முயற்சிகளை மழுங்கடிக்கும் ராஜ்ஜியரீதியான நடவடிக்கையாகவே சீனாவின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள ராணுவ முகாம்களின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்  தொடங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 14 -ஆம் தேதி, புல்வாமாவில் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப் ) வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்  வரை,  இந்தியாவில் அரங்கேற்றப்பட்டுள்ள பல்வேறு பயங்கரவாதத் தாக்குதலை, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ் -இ-முகமது எனும் பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ளது.

எனவே, இந்த அமைப்பை முற்றிலுமாக ஒடுக்கும் நடவடிக்கைகளின் முக்கிய அம்சமாக,   ஜெய்ஷ் -இ. முகமது  அமைப்பின் தலைவனான மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், மசூத் அசாருக்கு எதிராக இந்தியா கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.மேலும், இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் ஏற்க மறுக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்க முடியாது. 

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவளிக்க முடியாது என,  ஐ.நா. பாதுகாப்பு சபையில் தமக்குள்ள "வீட்டோ" அதிகாரத்தை வைத்து சீனா,  இதுநாள்வரை இந்தியாவின் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது. 

இந்த நிலையில்,  மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா தற்போது சப்பைக்கட்டு கட்டியுள்ளது. அதாவது இந்த விவகாரத்தில் இதுநாள்வரை இந்தியாவின்  முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்த சீனா, தற்போது மசூத் அசார் விஷயத்தில் அவருக்கு ஆதரவாகவும் இல்லை; எதிராகவும் இல்லை என்பது போன்ற மழுப்பலான நிலைப்பாட்டை சீனா எடுத்துள்ளது.

இந்த விஷயத்தில் தமது நிலைப்பாட்டை உலக அரங்கில் வெளிச்சம் போட்டு காட்டிவரும் இந்தியாவின் முயற்சிகளை மழுங்கடிக்கும் ராஜ்ஜியரீதியான நடவடிக்கையாகவே சீனாவின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP