Logo

மொறுமொறுப்பான  ப்ரெஞ்ச்  ப்ரை

நல்ல பெரிய, நீளமான உருளைக்கிழங்காகத் தேர்ந்தெடுத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, நீள நீளமாக நறுக்கி, நன்றாக அலச வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் உருளைக்கிழங்கை, தண்ணீரை வடித்து விட்டு நிழலில் கொஞ்ச நேரம் உலர விடுங்கள்.
 | 

மொறுமொறுப்பான  ப்ரெஞ்ச்  ப்ரை

மொறுமொறுப்பான  ப்ரெஞ்ச்  ப்ரை

மொறுமொறுப்பான  ப்ரெஞ்ச்  ப்ரை

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 1/2கிலோ
கார்ன்ஃப்ளோர் மாவு -2டேபிள் ஸ்பூன்
அரிசி  மாவு - 3டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 2 டீஸ்பூன்
எள் - 1டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் -1சிட்டிகை

மொறுமொறுப்பான  ப்ரெஞ்ச்  ப்ரை

செய்முறை


நல்ல பெரிய, நீளமான உருளைக்கிழங்காக பார்த்துத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, நீள நீளமாக நறுக்கி, நன்றாக அலசி வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் உருளைக் கிழங்கை, தண்ணீரை வடித்து விட்டு நிழலில் கொஞ்ச நேரம் உலர விடுங்கள். உருளைக்கிழங்கில் இருக்கும் ஈரம் நன்றாக காய்ந்ததும், கார்ன் ஃப்ளோர் மாவு, அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள், எள் அனைத்தையும் போட்டு பிசிறி விட வேண்டும் . ஈரப்பசை இல்லாமல் ஒட்டாமல் உதிரியாகவே இருக்கும். ஆனால், சிறிது நேரத்திற்கு பின் நன்றாகவே ஒட்ட ஆரம்பிக்கும். இப்போது மசாலா உருளைக்கிழங்குடன் நன்றாக சேர்த்துக் கொள்ளும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்க,  எள் வாசனையோடு மொறு மொறுப்பான ப்ரெஞ்ச் ப்ரை ரெடி

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP