Logo

பூமிதி திருவிழா என்றழைக்கப்படும் தீமிதி திருவிழா

பூமிதி திருவிழா என்றழைக்கப்படும் தீமிதி திருவிழா
 | 

பூமிதி திருவிழா என்றழைக்கப்படும் தீமிதி திருவிழா

ஆடி அம்மனுக்கு உகந்த மாதம் என்பதை அறிந்திருக்கிறோம். ஊரெங்கும் இருக்கும் அம்மன் கோயில்களில் அம்மனை வழிபட்டு அம்மனை மகிழ்விக்க பல்வேறு  சிறப்பு வழிபாடுகளை செய்து வரும் பக்தர்கள் அம்மனை குளிர் விக்க நெருப்புக்குழிக்குள் இறங்குவதும் உண்டு.

இந்து மதத்தில் இதிகாசங்களில் மட்டுமல்ல உலகில் இருக்கும் இதர மதங்க ளும் கூட அவரவர்கள் போற்றும் மகான்கள் தீ மீது நடந்து வந்ததைக் குறிப் பிடுகின்றன.

வட இந்தியாவில் பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர் களும் தீ மிதிக்கிறார்கள். ஜப்பானில் புத்தமதத்தினரும், ஸ்பெயினில் கிறித்து வர்களும் தீ மிதிக்கிறார்கள். சீனா, இலங்கை, தாய்லாந்து, ஜப்பான், பிஜி தீவு கள், நியூசிலாந்து, ஸ்பெயின், பல்கேரியா போன்ற உலக நாடுகளிலும் தீமிதித் தல் நடைபெறுகிறது.

 இராமயணத்தில்  இராமபிரான், சீதையை தூய்மையானவள் என்று உல கறிய வேண்டும் என்று அக்னியில் இறங்க சொன்னதையும்    குறீப்பிட்டு அக்னி பிரவேசம் செய்ததால் சீதை கற்புக்கரசி என்று புகழப்பட்டாள் என்பதையும் விளக்குகிறது.

தமிழகத்தில் இருக்கும் மாரியம்மன் கோயில்களில் பல நூறு ஆண்டுகளாக  தீமிதி திருவிழா நடப்பதை சரித்திரம் கூறுகிறது. தீ மிதித்தல் என்பது இந்து சமய நேர்த்திக்கடன்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இதை அக்னி குண்டத் தில் இறங்குதல், பூமிதித்தல் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். இதன் மூலம் இந்துக்களின் தெய்விக நம்பிக்கை சடங்கு சம்பிரதாயங்கள் மற்ற மதங்களைக் காட்டிலும் கடினமானதாகவும் அதிக நம்பிக்கை கொண்டதாகவும் அறிந்துகொள்ள முடிகிறது. ஆடி மாதத்தில் தான் பக்தர்கள் அம்மனை வேண்டி பூக்குழிக்குள் இறங்கி நடப்பார்கள். அதாவது தீமிதிப்பார்கள்.

தீமிதிக்கும் பக்தர்கள் தீமிதிக்கும் நாட்களுக்கு முன்பாகவே அம்மனை வேண்டி காப்பு கட்டி விரதம் இருப்பார்கள். தீமிதிக்கும் நாளன்று அம்மன் கோயில் களின் வெளியே தீமிதித்தலுக்காக அக்னி குண்டத்தைத் தயார் செய்வார் கள். அந்திசாயும் நேரத்தில் அம்மனை வேண்டி பூஜை செய்துசிறப்பு வழிபாடுகள் முடிந்து சாமியாடியபடி நீர் நிலைகளில் நீராடி அல்லது மஞ்சள் தண்ணீரில் மூழ்கியபடி அம்மன் பெயரை உச்சரித்தப்படி பூக்குழிக்குள் வருகிறார்கள்.

பக்தர்கள் பக்தியோடு நெருப்புத் துண்டங்கள் நிறைந்த அக்னி குண்டத்தில் உள்ளே நடந்து வெளியில் வருவதைப் பார்க்கும் போது பார்ப்பவர்களுக்கும் அம்மனின் மீது பக்தியும் பரவசமும் பெருகுகிறது.

தீமிதித்து வருபவர்களின் உடல் உறுப்புகள் அல்லாமல் கால் பாதங்களிலும் எந்தவிதமான பாதிப்புமின்றி இருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடி யாது.  அதே நேரம் தீமிதித்தலின் போது பக்தர்களுக்கு காயம் உண்டா னாலோ அல்லது தவறி விழுந்தாலோ அது அபசகுணமாகவோ பார்க்கப்படு கிறது.

இத்தகைய தீமிதி திருவிழாவைப் பக்தர்கள் பூமிதி திருவிழா என்று அழைக்கிறார்கள். அம்மன் தீயை பூவாக மாற்றுவதாக பக்தர்கள் எண்ணுகி றார்கள். பல நூறு பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த தீமிதி வைபவம் ஆடி மாதங்களின் சிறப்புகளில் ஒன்று. இதற்கு விஞ்ஞான ரீதியாக விளக்கமும் உண்டு என்னவென்பதை அடுத்து பார்க்கலாமா?
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP