சாய்பாபாவின் அற்புதங்கள்!

மும்பையைச் சேர்ந்த “தா்கட்” என்பவர் சாய்பாபா மீது அபார பக்தி கொண்டவா். அவரது மனைவி மற்றும் மகனும் அப்படியே. தா்கட்டின் மகன் தினமும் சாய்பாபாவிற்கு பூஜை செய்து ,நைவேத்தியம் படைத்து வழிபடுவது வழக்கம்.
 | 

சாய்பாபாவின் அற்புதங்கள்!

சாய்பாபா தனது பக்தர்களுக்கு எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் .தன்னை நம்பிவந்த எவரிடமும் பரிவும் ,பாசமும் காணபிக்காமல் அவர் இருந்ததே இல்லை .அவரது சக்திக்கு உட்பட்டதாக இருப்பின் அதனை வலியச் சென்று செய்து வழங்கி இருக்கிறார் சாய்பாபா. நேரிலும் ,கனவு வழியாகவும் நன்மைகள் பலவற்றைச் செய்திருக்கும் சாய்பாபா , அதுகுறித்து பிறர் யாரிடமும் பெரிதாக விளம்பரப்படுத்திக்கொண்டதே இல்லை என்பது அழுத்தமான உண்மை . அது தான் சாய்பாபாவின் தனிசிறப்பு .அங்கு தான் சாய்பாபா கடவுளின் மறுஅவதாரமாகவே பக்தா்களால் உணரப்படுகிறார் . அவர் செய்த பல்வேறு அற்புதங்களை இனி பார்க்கலாம்.

மும்பையைச் சேர்ந்ததா்கட்என்பவர் சாய்பாபா மீது அபார பக்தி கொண்டவா். அவரது மனைவி மற்றும் மகனும் அப்படியே. தா்கட்டின் மகன் தினமும் சாய்பாபாவிற்கு பூஜை செய்து ,நைவேத்தியம் படைத்து வழிபடுவது வழக்கம். அது மே மாதம் அவனுக்கு விடுமுறை. “ஷீரடி” செல்லும் ஆசை துளிர்விட்டது . ஆனால் தா்கட்டிற்கு அலுவலகத்தில் வேலைப் பளு அதிகம். விடுப்பு எடுக்க வாய்ப்பில்லை. ஆகவே, மனைவியும்,மகனையும் ஷீரடி சென்று வருமாறு கூறினார்.

ஆனால் அவரது மகனுக்கு மட்டும் ஒரு சிறிய தயக்கம் இருந்தது. காரணம் தினமும் சாய்பாபாவிற்கு நைவேத்தியம் படைத்து பூஜை செய்வதில் தடங்கல் ஏற்பட்டுவிடுமே என்பதுதான்.அவனது தயக்கத்தைக் கேட்டறிந்த தா்கட், " நீ கவலைப்படாமல் ஷீரடி சென்று வா. உனக்குப் பதிலாக சாய்பாபாவிற்கு நானே நைவேத்தியம் மற்றும் பூஜையை ஒழுங்காகச் செய்து வருகிறேன். பயப்படாமல் போய் வா . “என் மீது நம்பிக்கை வை". என்றார்.

சாய்பாபாவின் அற்புதங்கள்!

தந்தையின் வாக்கின் மீது நம்பிக்கை வைத்து அவரது மகனும் ஷீரடிக்குக் கிளம்பினான் .தர்கட்டும் தவறாமல் பூஜைகள் செய்துவந்தார்.ஆனால் சோதனை என்பது அனைவருக்கும் வருவது தானே! அது தர்கட்டிற்கும் வந்தது. ஒருநாள் அலுவலக வேலை காரணமாக அவசரமாகச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. அவசர அவசரமாக சாய்பாபாவிற்கு பூஜைகள் செய்துவிட்டு கிளம்பினார். ஆனால் நைவேத்தியம் படைக்க மட்டும் மறந்துவிட்டார் .வழக்கம்போல் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்தார் தா்கட் . வேலைக்காரனும் அவருக்கு உணவை எடுத்துப் பரிமாறினான் . ஆனால் நைவேத்தியத்தை மட்டும் அவன் வைக்கவில்லை.

அவனிடம் நைவேத்தியத்தை வைக்குமாறு கேட்டார் தா்கட். அப்போது அவன் பணிவோடு சொன்னான் , "ஐயா இன்று பூஜை மட்டும் தான் செய்தீர்கள் . நைவேத்தியம் படைக்கவில்லை " என்றான். துணுக்கென்றது தர்கட்டிற்கு . அவசரத்தில் நைவேத்தியம் படைக்க மறந்து போனது அவருக்குப் பெரிதும் வருத்தத்தைக் கொடுத்தது . உடனே ஷீரடியில் இருக்கும் தன் மகனுக்கு இந்த விபரத்தைத் தெரிவித்து வருத்தத்துடன் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். இதே வேளையில் ஷீரடியில் மற்றொரு அதிசயம் நிகழ்ந்த்து . தர்கட்டின் மனைவி மற்றும் மகனிடம் சாய்பாபா, "இன்று என்னைப் பட்டினி போட்டுவிட்டீர்களே!" என்று மனக்குறையோடு கூறினார் .

சாய்பாபாவின் அற்புதங்கள்!

அவர்களுக்கு இதன் அர்த்தம் புரியவில்லை. "சாய்பாபா, ஏன் இப்படிக் கூறுகிறீர்கள்? நாங்கள் செய்த தவறுதான் என்ன?" என்று பதற்றத்துடன் கேட்டனர் ." வழக்கம் போலவே இன்றும் மும்பையில் உள்ள உங்கள் இல்லத்திற்குச் சென்றேன் . பூட்டப்பட்டிருந்தது . சரி ஏதோஅவசர வேலையாக வெளியே சென்றுவிட்டீர்கள் போலும் என்று நினைத்து நான் உள்ளே சென்றேன் ஆனால், தர்கட் ,நான் சாப்பிடுவதற்கு அங்கு எதையுமே வைக்கவில்லை. பாத்திரங்கள் அனைத்தும் துடைத்து வைத்த மாதிரி இருந்தது . சாப்பிடாமலேயே திரும்பிவிட்டேன்" என்றார் சாய்பாபா. இதைக் கேட்டதும் தர்கட்டின் மகனுக்குச் சங்கடமாகிவிட்டது .

தனது தந்தை ஏதோ குளறுபடி செய்துவிட்டார். அவனுக்குப் புரிந்தது . உடனே மும்பைக்குப் போய் தந்தையிடம் இது பற்றிக் கோபமாகக் கேட்டால் தான் மனது நிம்மதியடையும் என்று தோன்றிற்று . எனவே மும்பை செல்வதற்கு சாய்பாபாவின் அனுமதியைக் கோரினான் . ஆனால் சாய்பாபா அனுமதி மறுத்துவிட்டார். என்ன செய்வது என்று யோசித்தான் . தந்தைக்குக் கடிதம் மூலம் தன் ஆற்றாமையையும், ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி கடிதம் ஒன்றை எழுதினான் .ஆக இருவரின் கடிதங்களும் ஒரே நேரத்தில் அவரவா்களுக்குக் கிடைத்தது . சாய்பாபாவின் அபார சக்தி கண்டு தா்கட் பிரமித்து இருந்த அதேசமயம், சாய்பாபாவின் தீர்க்கதரிசனம் கண்டு வியந்து நின்றனர் தாயும், மகனும்.

சாய்பாபாவின் அற்புதங்கள்!

வி. ராமசுந்தரம்

ஆன்மீக எழுத்தாளர்

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP