Logo

கனவை நினைவாக்கிய சாய்பாபா

சாய்பாபாவின் பக்தா்களில் இன்னுமொருவர் கபார்டே அவரது மகன் பெயர் பலவந்த். ஒரு நாள் பலவந்தின் கனவில் சாய்பாபா தோன்றினார்.
 | 

கனவை நினைவாக்கிய சாய்பாபா

சாய்பாபாவின் பக்தா்களில் இன்னுமொருவர் கபார்டே அவரது மகன் பெயர் பலவந்த். ஒரு நாள் பலவந்தின் கனவில் சாய்பாபா தோன்றினார். அவனது வீட்டிற்கே சாய்பாபா வந்திருந்தார் . இதனைப்  பார்த்து சந்தோஷத்தில் மகிழ்ச்சியில் நனைந்துபோன பலவந்த் , சாய்பாபாவை வீட்டிற்கே அழைத்து அவருக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தான் .

இது கனவுதான் என்ற போதிலும்,  நினைவு மாதிரியே அவனுக்குத் தோன்றியது .  இந்தக் கனவைப் பற்றித் தன் தந்தையிடம் விரிவாகக் கூறினான்.  ஆனால் கனவுதானே என்று நினைத்து ,அதைப்பற்றி அவ்வளவாக கபார்டே பொருட்படுத்தவில்லை. ஆனால், இந்தக் கனவிற்கு அவர் முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.

கனவை நினைவாக்கிய சாய்பாபா

இது நடந்து சில நாட்கள் கழிந்திருந்தன . கபார்டேயும் அவரது மகனும் ஷீரடிக்குச் சென்று சாய்பாபாவைத் தரிசித்தனர். அப்போது சாய்பாபா, பலவந்தை அருகே வருமாறு அழைத்தார்.  அவனும் படுபவ்யமாக சாய்பாபா அருகே சென்றான் ."நான் உன் வீட்டிற்கு வந்திருந்தபோது நல்ல சாப்பாடு போட்டாய் . ரொம்ப சந்தோஷம். திருப்தியாக இருந்தது. நன்றாகச் சாப்பிட்டேன் . ஆனால் விருந்து மட்டும் தானே கொடுத்தாய் தட்சணை எதுவும் எனக்குக் கொடுக்கவில்லையே "!என்றார் சாய்பாபா.

இதைக்கேட்டு அப்படியே பிரமித்துப் போனான் பலவந்த் . அவனது தந்தையும் கனவில் நடந்தது உண்மையான நிகழ்வே அறிந்து திடுக்கிட்டுப் போனார். " எனக்குக் கொடுக்க வேண்டிய தட்சணை இருபத்தைந்து ரூபாயை இப்போது கொடு" என்று மகிழ்ச்சியும், உரிமையும், கலந்த குரலோடு கேட்டார்  சாய்பாபா. அதேசமயம், சாய்பாபாவின் தீர்க்கதரிசனம் கண்டு வியந்து நின்றார் பலவந்த்.

கனவை நினைவாக்கிய சாய்பாபா
   வி. ராமசுந்தரம்

 ஆன்மீக எழுத்தாளர்

  EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP