Logo

குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்

To get kubera wealth, read this
 | 

குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்

விதயாரண்யர் ஒரு மகாபுத்திமான். மனைவியும் – நிறைய  குழந்தைகளும் பெற்றிருந்த  அவரிடம்,  அவர்களைக் காப்பாற்ற  பணமில்லாமல்  இருந்தது. ”உங்களிடம்  புத்தியிருந்தால்  மட் டும்  போதாது ! எங்களைக்  காப்பாற்ற பணமும்  வேண்டும் . அதற்கான வழி செய்யுங்கள் . குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றன…” என்று  மனைவி வருத்தத்துடன்  கெஞ்சினாள்.  குடும்பத்தைக் காப்பாற்றும்  கடமையிலிருந்து  தவறி  விட்டோமே என்று மனம்  வருந்தி, நிறைய  பணம்  வேண்டி மகாலட்சுமியைத்  தியானம் செய்தார் வித்யாரண்யர்.

”இந்த  ஜென்மத்தில்  அதற்கான அருள்  உனக்கில்லை.  அடுத்த  ஜென்மத்தில் தான்   உண்டு !" என்று  தேவி அருள் வாக்கருளினாள். 
மகாபுத்திசாலியான  வித்யாரண்யர்,  ஆதிசங்கரர்  துறவு  பூண்டு  மீண்டும் ஒரு பிறவி  எடுத்ததுபோல்,  துறவு கொண்டு,  தேவியை  மீண்டும்  தியானித்தார். ”மகாலட்சுமி  தேவி!  துறவரம்  பூண்டதால்  மீண்டும்  ஒரு பிறவி எடுத்து விட்டேன்!  தயைகூர்ந்து  எனக்கு வரமளிப்பாய் "  என்று  வேண்டினார். லட்சுமி  தேவியின்  அருள்  பரிபூரணமாகக்  கிட்டியது!  பொன்னும்,  பொருளூம் மழையென  பொழிந்தாள் கருணைக்கடலாம் மகாலட்சுமி. 

 எத்தனைப்  பெரிய  புத்திமானாக  இருந்தாலும்  சிற்சில  நேரங்களில் அவசரப்பட்டு  தமது  புத்தியை  இழந்து  விடுவதுபோல், வித்யாரண்யரும் பணமும் பொருளும்  கேட்டுப்  புத்தியை  இழந்து விட்டார்...’சன்யாசியான  பின்பு  இவ்வளவு பொன்னும்,  பொருளும் நமக்கெதற்கு? அவசரப்பட்டுப்  பொருளாசைக்கு  அடிமையாகி  விட்டோமே!’  என்று வருந்தினார். 

அப்போது,  மாலிக்கபூர்  என்ற  துருக்கியர்  ஒருவர்  இந்தியா  முழுவதும்  படை யெடுத்து  நமது  கோயில்களைச் சூறையாடிக்  கொண்டிருந்தார். இந்துக்களின் அன்றாட வாழ்க்கைக்கே  ஆபத்து  ஏற்பட்ட து. 
 வித்யாரண்யருக்கு  ஒரு யோசனை தோன்றியது . ‘ இவ்வளவு  பெரிய சம்பத்தைக்  கொண்டு  இந்து  சாம்ராஜ்யத்தை  ஏற்படுத்தி,  இந்துமதத்தைக் காப்பாற்றி  விடலாம் !’ என்று தீர்மானித்தார்.  மகாலட்சுமியின்  அருளால் இந்து தர்மத்தைக்  காத்திட  சாம்ராஜ்யம் ஒன்றை  நிறுவினார். அன்னியரின் படையெடுப்பைத்  தகர்த்தெறிந்தார்.  இந்துமதம் தழைத்தது.

மகாலட்சுமியின்  அருளால்  நமக்குக் கிடைக்கும்  பொருளைக்  கொண்டு நல்ல காரியங்களில்  மட்டும்தான்  ஈடுபட வேண்டும்.
 பலவித  துர்மார்க்கங்களில்,  மனம்போன  போக்கில்  நாம்  இந்த  செல்வத்தை விரயம்  செய்வோமானால்,  ஸ்ரீதேவி  நம்மைவிட்டு  அகன்றுபோய்,  நாம்  மீளாத்  தரித்திர  நிலையில்  மூழ்கி விடுவோம். 

எல்லாவித  சௌபாக்கியங்களும் பெற்று,  இனிதான வாழ்க்கையை நல்லமுறையில் நடத்திட ஸ்ரீமகாலட்சுமியை  சரணடைய  வேண்டும். பரிபூரணமாகச்  சரண்  அடைந்து  பின்பு அவளது  அனுக்கிரஹத்தைப் பெறவேண்டும். ஸ்ரீஸுக்தத்திலிருந்து   எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட இரண்டு சுலோகங்களும் முறையே  சரண்  அடையவும் - பலன் பெறுவதற்காகவும்  ஆவன …. 

'ஆதித்ய வர்ணே தபஸோதி  ஜர்தோ

வனஸ்பதி  தவ  வ்ருகோத  பில்வ

தஸ்ய  பலாநி தபஸா நுதந்து

மாயாந்தராயாஸ்ச  பாஹ்யா அலஷ்மீ

சூர்யகாந்திக்கு நிகரான தேஜோமயமானவளே!  நினது  அனுக்கிரஹத்தாலேயே விருஷராஜன்  எனப்படும்  வில்வ மரம்  உண்டாயிற்று. அம் மரத்தின்  பழங்கள் எனது அஞ்ஞான இருளை அகற்றட்டும்;  ஜம்புலன்களாலும்  உண்டான பாவங்களை  நீக்கட்டும்!

"உபைதுமாம் தேவஸக  கீர்த்திஸ்ச மணிநாஸஹ

ப்ராதுர்பூதோஸ்மி  ராஷ்ட்ரேஸ்மித் கீர்த்திம் ருத்திம்  ததாது  மே

’ஹேதேவி!  தேவி ஸகாயனான மாதவன்  எனக்கு அருள் புரியட்டும். கல்வியாலும், செல்வத்தாலும்  எனக்குப் புகழ்  உண்டாகட்டும் . இவ்வுலகில் பிறந்து விட்டேன் .  உன்னையே வேண்டுகிறேன்.  உன் அனுக்கிரஹத்தால் செல்வக்  கோமான் குபேரன் என் நண்பனாகட்டும்!  புகழ்க்கன்னி என்னைச் சேரட்டும்!  சிந்தித்ததெல்லாம்  தரும் சிந்தாமணி  என்னுடையதாகட்டும்"

மேலும் சகல சௌபாக்கியங்களுக்கும்  அதிபதி  கிரகமான சுக்ரனை மனதால் நினைத்து - கோலமிட்டு, அவருக்கான சுலோகத்தையும் பாராயணம் செய்தால் தேவியின்  அனுக்கிரஹத்தைப் பரிபூரணமாகப்  பெறலாம் .

சுக்ர ஸ்துதி:

"ஹிமகுந்த ம்ருளுணுலாபம்

தைத்யாநாம் பரமம் குரும் 

ஸர்வஸாஸ்த்ர ப்ரவக்தாரம்

 பார்கவம் ரணமாம்யஹம்’’.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP