கேதார கவுரி விவரம் தோன்றியது எப்படி?

தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து ஆல மரத்தின் கீழ் சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்து, அபிஷேகம் செய்து விபூதி, சந்தனம், பூக்கள், அட்சதை போட்டு வெற்றிலை, பாக்கு, பழம், பட்சணங்கள் படைத்து, அந்த பிரசாதத்தினையே உண்ண வேண்டும்.
 | 

கேதார கவுரி விவரம் தோன்றியது எப்படி?

கயிலாயத்தில் பரமசிவனும், பார்வதியும் நவரத்தினங்கள் இழைத்த சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பர். பிரம்மா, விஷ்ணு, முப்பத்து முக்கோடி ரிஷிகள், தேவர்கள் மற்றும் அநேக தேவ ரிஷிகளும் தினந்தோறும் இவர்கள் இருவரையும் சுற்றி வந்து நமஸ்கரித்துச் செல்வர்.

பிருங்கி ரிஷி என்பவர் மட்டும், பார்வதியை விட்டு விட்டு,  சிவனை மட்டும் சுற்றி வந்து நமஸ்கரித்தார்.
இதனால் பார்வதிககு கோபம் உண்டாயிற்று. ‘ஏன் பிருங்கி ரிஷி இவ்வாறு செய்கிறார’ என,பார்வதி, சிவனைக் கேட்டார். 

சிவன் அதற்கு ‘பிருங்கி ரிஷி பாக்கியங்களை கேட்கவில்லை. மோட்சத்தினையே விரும்புகிறார். ஆகவே தான், அவர் என்னை மட்டும் சுற்றி வந்தார்’  எனக் கூறினார்.

பார்வதி தேவி, பிருங்கி ரிஷியினைப் பார்த்து ‘உன் தேகத்தில் இருக்க்ற ரத்த மாமிசங்கள், நான் கொடுத்தது. அதனை திருப்பி கொடுத்து விடு’ என கூறினாள். பிருங்கி ரிஷியும், பார்வதி தேவி கேட்டபடியே, செய்தார். அதனால் அவருக்கு நிற்கக் கூட முடியாமல் போயிற்று. 

பரமசிவன், பிருங்கி ரிஷியினை நோக்கி, ‘நீ பார்வதி தேவியினை விட்டு, என்னை நமஸ்கரித்ததால், அன்னை உனக்கு இந்த தண்டனை அளித்தாள்’ எனக் கூறி ,ஒரு கைத்தடி ஒன்றினைக் கொடுத்தார்.

பிருங்கி ரிஷி அதனைப் பெற்றுச் சென்றார். பார்வதி தேவி, சிவனிடம் கோபித்துக் கொண்டு கயிலாயத்தினை விட்டுச் சென்று, பூவுலகிற்கு வந்தார். அங்கு, வால்மீகி மகரிஷி வசித்து வந் ஆசிரமத்தில் இருந்த நந்தவனத்தில்  ஒரு மரத்தின் அடியில் எழுந்து அருளினார்.

அந்தப் பகுதியானது ,12 ஆண்டுகள் மழையின்றி வறண்டு இருந்த பூமி. பார்வதி தேவி, மரத்தின் அடியில் அமர்ந்ததும், அங்கு மழை பெய்தது. செடி, கொடி, மரங்கள் தழைத்தன. பூத்துக் குலுங்கின. 

பல அரிய பூக்களின் வாசத்தினைக் கண்டு வால்மீகி மகரிஷி அங்கு வந்து அன்னையை தரிசித்தார். பூஜை செய்து வணங்கி அம்பிகையிடம் முழு விவரங்களும் கேட்டறிந்தார். பின்னர் தேவியினை தன் ஆசிரமத்திற்குள் அழைத்துச் சென்று, நவரத்தின சிம்மாசனத்தினில் அமரச் செய்தார்.

பார்வதி தேவி, வால்மீகி முனிவரைப் பார்த்து, “ரிஷியே, நான் மீண்டும் ஈசனுடன் சென்று சேருவதற்கு இந்த பூலோகத்தில் மிக மேலான ஒரு விரதத்தினை, நான் ஏற்று செய்ய வேண்டும். அப்படியொரு விரதத்தினை கூறுங்கள்’ என கேட்டாள்.

அப்போது, வால்மீகி முனிவர் அம்பிகையை வணங்கி கூறியதாவது:-
இந்த பூலோகத்தில் ஒருவரும் அறியாத ஒரு விரதமுண்டு. அந்த விரதத்திற்கு கேதாரீஸ்வரர் நோன்பு என்று பெயர். அந்த விரதத்தினை அனுஷ்டித்தால், நீங்கள் நினைத்தது நடக்கும்’ என்றார். அம்பிகை, அந்த விரதத்தினை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்று கேட்க வால்மீகி முனிவர், ‘புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம், தீபாவளி அமாவாசை வரைக்கும் தொடரும் விரதம் இது. 

தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து ஆல மரத்தின் கீழ் சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்து, அபிஷேகம் செய்து விபூதி, சந்தனம், பூக்கள், அட்சதை போட்டு வெற்றிலை, பாக்கு, பழம், பட்சணங்கள் படைத்து, அந்த பிரசாதத்தினையே உண்ண வேண்டும்.

நோன்பு கயிற்றினை கையில் அணிய வேண்டும். 21-வது நாள் ஈஸ்வரன் காட்சி அளித்து வேண்டிய வரம் அளிப்பார் என்று கூறினார்.

இந்த விரதம் பற்றிய மேலும் விபரங்களை வரும் நாட்களில் பார்ப்போம். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP