Logo

கேட்பவர்களின் மனநிலையைப்படியே கேட்பதும் திவ்வியமாக கிடைக்கிறது... 

‛‛கேள்விகளுக்கான பதில் அளிப்பதை விட, கேட்பவர்களின் மனநிலை அறிந்து பதில் அளிக்க வேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன்’’ என்றார். பக்தனின் வேண்டுதல் கூட, கேட்பவர்களின் மனநிலையின் அடிப்படையிலேலே இறைவனிடம் சென்று அருளை பெற்றுத் தருகிறது
 | 

கேட்பவர்களின் மனநிலையைப்படியே கேட்பதும் திவ்வியமாக கிடைக்கிறது... 

கைகூப்பி கடவுளைத் தொழுதாலும், வேண்டுதலை நிறைவேற்ற கடவுள் எடுத்துக்கொள்ளும் கால அளவில், கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகத்துக்கு உட்படும் மனிதர்கள் நம்மிலும் இருக்கிறார்கள். கடவுள் இருக்கிறாரா என்று கேட்டவர்களுக்கு, புத்தன் சொன்ன விளக்கம் என்ன என்பதை பார்க்கலாம். 

புத்தரிடம் மக்கள் வந்து என்ன கேட்டாலும் பொறுமையாக, அன்போடு விளக்கம் அளித்ததால், மக்கள் எவ்வித தயக்கமுமின்றி புத்தரை நாடினார்கள். 
ஒரு நாள் காலை வேளையில், புத்தரைக் காண ஒருவர் வந்தார். ”தங்களிடம் ஒருகேள்வி கேட்க வேண்டும்” என்றார். ”என்ன வேண்டுமானாலும் கேளுங்கள். எனக்குத் தெரிந்த பதிலை நான் கட்டாயம் உங்களுக்கு சொல்கிறேன்” என்றார் புத்தர் அமைதியாக. 

“கடவுள் இருக்கிறார் தானே ? இதற்கு தாங்கள் எனக்கு புரியும்படி பதில் கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.  சிறிது நேரம் கழித்து புத்தர், ”இல்லை” என்று பதில் கூறினார். புத்தருக்கும், அம்மனிதருக்கும் நடக்கும் இந்நிகழ்வை புத்தரின் சீடன் ஒருவன் கவனித்து வந்தான். கேள்வி கேட்டவர் ”மிகவும் மகிழ்ச்சி” என்று புத்தரை வணங்கிவிட்டு திரும்பிவிட்டார்.

 சிறிது நேரம் கழித்து புத்தரைக் காண வேறொருவர் வந்தார். ”தங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். இப்போதுதான் எனக்கு அதற்கு நேரம் கிடைத்தது கடவுள் என்ற ஒருவர் இல்லைதானே?” என்று கேட்டார். “இருக்கிறார்” என்றார் புத்தர். 

மாலை நேரம் வந்த மற்றொருவர், ”ஐயா கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்பதே எனக்குத் தெரியவில்லை நான் என்ன செய்வது?” என்று கேட்டார். நீ சரியான பாதையைத்தான் தேர்வு செய்திருக்கிறாய் அப்படியே இரு” என்றார். இவையெல்லாவற்றையும் பார்த்த சீடனுக்கு சந்தேகம் வந்து விட்டது.

இரவு நேரம் புத்தரின் அருகில் வந்து அமர்ந்தான் அந்த சீடன். ”எங்கள் ஐயங்களைத் தீர்த்து வைக்கும் நீங்கள்  உங்களிடம் வந்து சந்தேகமெழுப்பிய அனைவருக்கும் வெவ்வேறு விதமான பதில்களை கூறினீர்களே எனக்கே குழப்பம் வந்துவிட்டது. 

உண்மையில் கடவுளைப் பற்றீய தங்களின் நிலை என்ன” என்றான்.  ”இதில் எவ்விதமான குழப்பமும் உனக்கு வேண்டாம் அவர்களது கேள்விக்கேற்பவே என் பதில்கள்” என்று புத்தர்  தெளிவாக கூறினார். 
முதலில் வந்தவர் கடவுள் இருக்கிறார் அல்லவா? என்று ஏற்கனவே முடிவு செய்து என்னிடம் கேள்வி கேட்ட தால் நான் இல்லையென்று பதில் சொன்னேன். 

இப்போது அவர் கடவுளைத்தேட தொடங்கியிருப்பார். அடுத்து வந்தவர் கடவுள் இல்லை என்று முடிவு செய்து பிறகே என்னிடம் வந்து கேட்டார். அதனால் தான் கடவுள் இருக்கிறார்... என்று அவரிடம் சொன்னேன். இப்போது அவரே சுயமாக கடவுளைத் தேடுவார். 

இறுதியாக வந்தவர் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று கேட்டார் அவர் ஏற்கனவே கடவுளைத் தெடிக்கொண்டிருக்கிறார் . அப்படியானால், அவர் சரியான பாதையில் தான் செல்கிறார். அதைத் தான் நானும் சொன்னேன். இப்போது புரிந்ததா?’’ என்றதும், அந்த சீடனுக்கு புத்தரின் பதில்  திருப்தி அளித்தது. 

மேலும் ‛‛கேள்விகளுக்கான பதில் அளிப்பதை விட, கேட்பவர்களின் மனநிலை அறிந்து பதில் அளிக்க வேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன்’’ என்றார். பக்தனின் வேண்டுதல் கூட, கேட்பவர்களின் மனநிலையின் அடிப்படையிலேலே  இறைவனிடம் சென்று அருளை பெற்றுத் தருகிறது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP