மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கும் வனிதா விஜயகுமார்!

பிக்பாஸ் சீசன் 3ல் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமார் இன்றைய எபிசோட்டில் பிக்பாஸ் வீட்டிற்குள் மேளதாளத்துடன் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார்.
 | 

பிக் பாஸ் சீசன் 3 நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.  நேற்றைய தினம் எலிமினேஷன் ரவுண்ட்டில் சாக்ஷி வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், 50வது எபிசோட்டிற்கான பிரோமோ வெளியாகியுள்ளது. முதல் பிரோமோவில், பிக்பாஸ் வீட்டிற்கு ஒரு விருந்தாளி வருவதாக பிக்பாஸ் வீட்டினருக்கு அறிவிப்பு கொடுக்கப்படுகிறது.  

பிக்பாஸ் வீட்டினர் அவரை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளுடனும் தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் மேளதாளத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார் வனிதா விஜயகுமார். 

இதனிடையே அடுத்த பிரோமோவில் கவினிடம் பேசும் வனிதா விஜயகுமார், உங்க லவ்க்கு மதிப்பு இல்ல, லவ் எல்லாத்தையும் தூக்கி குப்பையில போடுங்க என்று கூறும் காட்சி இன்றைய எபிசோட்டில் உறுப்பினர்களின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP