Logo

தேசத்துரோக வழக்கு வருத்தமளிக்கிறது: பாரதிராஜா

இயக்குநர் மணி ரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்க பதியப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
 | 

தேசத்துரோக வழக்கு வருத்தமளிக்கிறது: பாரதிராஜா

இயக்குநர் மணி ரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்க பதியப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

கடந்த கடந்த ஜூலை மாதம்  'பசு வதை தடுப்பு' என்னும் போர்வையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை  தடுக்கும்  வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களான  மணி ரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். இந்த கடிதத்தை எதிர்த்து பீகாரை  சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநலவழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மணிரத்னம் உட்பட கடிதம் எழுதிய 49 பேர் மீதும் தேசதுரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தது. 

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் பாரதிராஜா திரையுலகினர் 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாகவும், அரசை விமர்சித்தால் தேசத்துரோகி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். 

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP