மாலைக்கண் நோயால் பாதிக்கப்படும் வைபவ்: இயக்குனர் வெளியிட்ட ட்ரைலர்!
வைபவ் நடித்துள்ள 'சிக்ஸர்' படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ்க்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இடிசையமைத்துள்ளார். அதோடு சிக்ஸர் படத்திற்காக பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் 'எங்க ஏங்கவேனா கொஞ்சிக்க' என்னும் பாடலை பாடியுள்ளார்.
இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை இயக்குனர் ஏ. ஆர் . முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலரின் படி மாலை கண் நோயால் பாதிக்கப்பட்ட நாயகன் எவ்வாறு தனது குறையை மறைத்து சக மனிதர்களுடன் பழகுகிறார் என்பதையும், இதனால் நாயகன் சந்திக்கும் பிரச்னைகளையும் நகைச்சுவை கலந்த கதை களத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Happy to launch the #SixerTrailer https://t.co/z5hmiNKgfY. Looks like a package of pucca entertainment. Best wishes to the entire team👍#Sixer #SixerFromAug30@WallMateEnt @tridentartsoffl @dinesh_WM @iamsridhu @chachi_dir @actor_vaibhav #PalakLalwani @actorsathish @Muzik247in
— A.R.Murugadoss (@ARMurugadoss) August 22, 2019
newstm.in
newstm.in