மாயா இயக்குநருடன் டாப்ஸியின் 'கேம் ஓவர்'!

சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு ரீ எண்ட்ரியாகியிருக்கும் டாப்ஸி 'கேம் ஓவர்' என்ற படத்தில் நடிக்கிறார். தற்போது இந்தப் படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
 | 

மாயா இயக்குநருடன் டாப்ஸியின் 'கேம் ஓவர்'!

சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு ரீ எண்ட்ரியாகியிருக்கிறார் நடிகை டாப்ஸி. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் அந்தப் படத்துக்கு, 'கேம் ஓவர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே நயன்தாராவின் நடிப்பில் வெளியான 'மாயா' படத்தை இயக்கியவர். 

சமீபத்தில் கேம் ஓவர் திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது. அதில் சக்கர நாற்காலியில் டாப்ஸி அமர்ந்திருந்தார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. 

இதைப்பற்றி அஸ்வின் சரவணன், "படத்தின் 35 நாள் படபிடிப்பு முழுவதும் அதிகாரப்பூர்வமாக முடிந்துவிட்டது. இப்படியான குறுகிய கால படப்பிடிப்பு அனுபவத்தை இப்படம் எனக்குக் கொடுத்துள்ளது. நடிகை டாப்ஸி, தயாரிப்பு நிறுவனமான 'ஒய் நாட் ஸ்டூடியோஸ்', மற்றும் மொத்த குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP