Logo

இன்று வெளியாக உள்ள விஜய் படத்தின் ஆடியோ!

பிகில் படத்தின் ஆடியோ லாஞ்ச் செப்டம்பர் 19 ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
 | 

இன்று வெளியாக உள்ள விஜய் படத்தின் ஆடியோ!

பிகில்  படம் அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது. அதோடு வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் செப்டம்பர் 19 ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆடியோ  வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவின் போது நடிகர் விஜய் பிகில் படத்தில் இடம் பெற்றுள்ள ’வெறித்தனம்’ பாடலை பாடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP