" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்! 

சீனுராமசாமியின் வாழ்த்துக்கு, தனக்கே உரித்தான பாணியில் நன்றி தெரிவித்துள்ள பார்த்திபன்: ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா, தன் புள்ள தானே வளரும்" என பதிவிட்டுள்ளார்.
 | 

" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்! 

இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் "ஒத்த செருப்பு'   என பெயரிடப்பட்டுள்ள  திரைப்படத்தை இயக்கி அதில் தான் மட்டுமே நடித்துள்ளார். இந்த படத்திற்கு  சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 இந்த படத்தின் குறு முன்னோட்டம் வெளியாகி  பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.  இந்த பாராட்டுகளுக்கு தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து வருகிறார் பார்த்திபன். 

அதன் படி இயக்குனர் சீனுராமசாமியின்  வாழ்த்துக்கு, தனக்கே உரித்தான பாணியில் நன்றி தெரிவித்துள்ள பார்த்திபன்:  ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா, தன் புள்ள தானே வளரும்"பழமொழி போல... (Sorry Typo mistake பொண்டாட்டி என்ற வார்த்தையை புள்ளை என்று வாசிக்கவும்)திரு சீ ரா, சீராட்டி பாராட்டி மகிழ்வார் என் போன்ற ஊரான்களை! என பதிவிட்டுள்ளார்.

இவரது பதிவுகள் பலருக்கும் புரியாத புதிராகவே  இருந்து வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகிவிட்டது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP