சிவகார்த்திகேயன் அடுத்த படம் 'ஹீரோ'
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்திற்கு "ஹீரோ" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்யவுள்ளார். மேலும் ஜார்ஜ் ஒலிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோகல் படத்தின் வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மித்ரன் இயக்கும் படத்திற்கான வேலைகள் தொடங்கிவிட்டன.
இந்த படத்திற்காக இசையமைக்கும் வேலைகளை யுவன் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு ஹீரோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
newstm.in
newstm.in