ரஜினி, ரகுவரனுக்கு நடிப்பதற்கு பயிற்சி கொடுத்த நடிகர் மரணம்!

பிரபல தெலுங்கு நடிகர் தேவதாஸ் கனகலா உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 74.
 | 

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தேவதாஸ் கனகலா, சில படங்களையும் இயக்கியுள்ளார். டிவி சீரியல்களில் நடித்தும், இயக்கியும் உள்ளார். இவரது மகன் ராஜீவ் கனகலா தெலுங்கில் பிரபல நடிகராவார். மருமகள் சுமாவும் பிரபல தொகுப்பாளராக உள்ளார்.  

தேவதாஸ் கனகலா அடையார் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ரஜினிகாந்த், ரகுவரன், சிரஞ்சீவி, ராஜேந்திர பிரசாத், நாசர் உள்ளிட்டோருக்கு நடிப்பு பயிற்சி கற்றுக்கொடுத்தவர் ஆவார். தேவதாஸ் கனகலா கடைசியாக மகேஷ் பாபு நடிப்பில்  ‘பரத் எனும் நான்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரது மறைவுக்கு தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்தவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு  தேவதாஸ் கனகலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP