சர்வம் தாள மயம் படத்திற்காக ரஹ்மான் செய்த செயல்!

பீட்டரின் உலகை உலுக்கும் கேள்வி ஒன்றைக் கேட்கிறாள் சாரா. அந்தக் கேள்விக்கான விடையை பீட்டர் தேடும் பயணம் - சர்வம் தாளமயம், பிப்ரவரி 2019 முதல்" என அந்தப் படத்தைப் பற்றி பதிவொன்றை வெளியிட்டுருக்கிறார் ரஹ்மான்
 | 

சர்வம் தாள மயம் படத்திற்காக ரஹ்மான் செய்த செயல்!

இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக டிரான்ஸ்ஃபார்மாகிய, ஜி.வி.பிரகாஷ் தற்போது 'சர்வம் தாள மயம்' திரைப்படத்தின் நடித்து முடித்திருக்கிறார். ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தை 'மின்சாரக்கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்' ஆகியப் படங்களை இயக்கிய, இயக்குநர் ராஜிவ் மேனன் இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க இசையை மையப்படுத்தி 'மியூஸிக்கல் ஃபிலிமாக' எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கிறார். 

நெடுமுடி வேணு, வினித் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ராஜிவ் மேனனின் மைண்ட்ஸ்கிரீன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். 

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் அவரது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். "பீட்டரின் உலகை உலுக்கும் கேள்வி ஒன்றைக் கேட்கிறாள் சாரா.
அந்தக் கேள்விக்கான விடையை பீட்டர் தேடும் பயணம் - சர்வம் தாளமயம், பிப்ரவரி 2019 முதல்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால் காதலர் தின ஸ்பெஷலாக இந்தப் படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP