ராகவா லாரன்ஸின் நெகிழ வைக்கும் செயல்...!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில்,கஜா புயலால் சேதமடைந்த சமூக சேவகர் `515 கணேசன்' என்பவருக்கு, தனது சொந்தச் செலவில் புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்து நெகிழ வைத்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
 | 

ராகவா லாரன்ஸின் நெகிழ வைக்கும் செயல்...!

நடிகர்,இயக்குனர், நடன ஆசிரியர் என்பதையும் தாண்டி  தன்னை நல்ல சமூக சேவகராக நிலை நிறுத்திக் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு, தலா10 லட்சம் மதிப்பில், தனது சொந்த செலவில் வீடு கட்டித்தர முடிவு செய்து அதற்கான பணிகளை செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கஜா புயலால் சேதமடைந்த சமூக சேவகர் `515 கணேசன்' என்பவருக்கு, தனது  சொந்தச் செலவில் புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்து நெகிழ வைத்துள்ளார் ராகவா லாரன்ஸ். தற்போது, கணேசனின் வீடு கட்டிமுடிக்கப்பட்டு, புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு  சமூக சேவகர் கணேசனிடம் வீட்டின் சாவியை வழங்கியுள்ளார். 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP