நடிகர் சூர்யா நற்பணி மன்றத்தில் இணைந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள்!

கோவையில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று நடிகர் சூர்யா நற்பணி மன்றத்தில் இணைந்தனர்.
 | 

நடிகர் சூர்யா நற்பணி மன்றத்தில் இணைந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள்!

கோவையில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று நடிகர் சூர்யா நற்பணி மன்றத்தில் இணைந்தனர். 

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள 641 அரங்கில் கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர் போன்ற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் நடிகர் சூர்யா நற்பணி மன்றத்தில் இணையும் விழா நடைபெற்றது. கோவை மாவட்ட மாணவரணி, தொண்டரணி தலைவர் கார்த்திக் சந்துரு தலைமையில் மாவட்ட தலைவர் சுனில் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 500 இளைஞர்கள் சூர்யா நற்பணி மன்றத்தில் இணைந்தனர். 

இதை தொடர்ந்து பேசிய மாவட்ட தலைவர் சுனில், காப்பான் திரைப்படம் வெளியீட்டை கொண்டாடவுள்ளதாகவும், 100 வார்டுகளிலும் விரைவில் நடிகர் சூர்யா நற்பணி மன்ற பெயர் பலகை திறக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP