Logo

#Metoo: கெட்டவன் என்று யாரை குறிப்பிடுகிறார் லேகா வாஷிங்டன்!

நடிகை லேகா வாஷிங்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே வார்த்தையில் தனது மீடூ அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கெட்டவன் என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளார்.
 | 

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து பிறகு திரைப்படங்களில் நடித்தவர் லேகா வாஷிங்டன். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் விகாஸ் பால் குறித்து மீடூவில் சிலர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த போது அதற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று ஒரே வார்த்தை: கெட்டவன் #metoo என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். 

நந்து இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த படம் கெட்டவன். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக லேகா வாஷிங்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் இந்த படம் சில பல காரணங்களால் பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில் லேகாவின் இந்த ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

அவர் கெட்டவன் என்று யாரை குறிப்பிடுகிறார் என்ற கேள்வி அனைவரித்திலும் எழுந்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP