பாலியல் குற்றச்சாட்டால் மனம் உடைந்த ’கைலாஷ் கேர்’ 

பெண் பத்திரிகையாளர் ஒருவர் தன் மீது சுமத்திய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக, பிரபல இசையமைப்பாளர் கைலாஷ் கேர் தெரிவித்துள்ளார்.
 | 

பாலியல் குற்றச்சாட்டால் மனம் உடைந்த ’கைலாஷ் கேர்’ 

பெண் பத்திரிகையாளர் ஒருவர் தன் மீது சுமத்திய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக, பிரபல இசையமைப்பாளர் கைலாஷ் கேர் தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டு நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக  நடிகை தனுஷரி தத்தா கடந்த மாதம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளை சார்ந்த பெண்கள், தாங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.

அந்த வரிசையில், பெண் பத்திரிகையாளர் ஒருவர், இசையமைப்பாளர் கைலாஷ் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் "நான் பிறரிடம் மரியாதையாக நடந்துகொள்வேன். குறிப்பாக பெண்களிடத்தில் எவ்வளவு மறியாதை கொண்டவன் என்பது என்று என்னை சுற்றி உள்ளவர்களுக்கு தெரியும்" என்று கைலாஷ் கூறியுள்ளார்.

பாட்னாவில் இருந்த போது இந்த செய்தியைப் பற்றி கேள்விப்பட்டதாகவும், ​​"அந்த செய்தியில் குறிப்பிட்ட படி நான் எந்த தவறும் செய்யவில்லை. இது எனக்கு மிகவும் மனவேதனை அளிக்கிறது" என வருத்தத்துடன் கைலாஷ் தெரிவித்தார்.

"நான் என் பெரும்பாலான நேரங்களை எனக்கான இசை உலகத்தில் செலவிடுவேன். ஆனால், அது யாருக்காவது தவறாக பட்டிருந்தாலோ காயப்படுத்தி இருந்தாலோ, என்னை மன்னித்து விடுங்கள்" என்றும் கைலாஷ் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP