ஆட்டம் பாட்டத்துடன் ஆரம்பித்த நேர்கொண்ட பார்வை!

திரையரங்குகளின் முன்னால் வைக்கப்பட்டிருந்த அஜித்தின் கட் அவுட்டுகளுக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்து, ஆடலும் பாடலுமாக ஆரவாரம் செய்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 | 

ஆட்டம் பாட்டத்துடன் ஆரம்பித்த நேர்கொண்ட பார்வை!

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை.   எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள  இந்த படம் பாலிவுட் திரையுலகில் ஹிட் அடித்த பிங்க் திரைப்படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

ஆனால் இந்த படத்தில் தல அஜித்திற்கான பிரத்யேக காட்சிகள் அதிகம் இடம்பிடித்துள்ளது என்றே சொல்லலாம். அஜித் இதுவரை நடித்திராத வித்யாசமான கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பதால் அஜித்தின் நடிப்பை காண்பதற்கான ஆவல்  அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல், சினிமா காதலர்களையும் ஈர்க்கத்தான் செய்தது.

இந்நிலையில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் மூன்று பெண்களுக்காக குரல் கொடுக்கும் வக்கீலாக அஜித் நடித்துள்ள இந்த படம் இன்று உலகெமெங்கும் அதிகாலை முதலே திரையிடப்பட்டது.  இதனை தொடர்ந்து திரையரங்குகளின் முன்னால் வைக்கப்பட்டிருந்த  அஜித்தின் கட் அவுட்டுகளுக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்து, ஆடலும் பாடலுமாக ஆரவாரம் செய்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP