பிரபல நகைச்சுவை நடிகர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மரணம்!

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் ஜெயச்சந்திரன் நேற்று காலமானார்.
 | 

பிரபல நகைச்சுவை நடிகர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மரணம்!

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் ஜெயச்சந்திரன் நேற்று காலமானார். 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பிறந்தவர் நகைச்சுவை நடிகர் ஜெயச்சந்திரன் (66). இவர் தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஆறு படத்தில் வடிவேலுடன் இணைந்து நடித்திருப்பார். சமீப காலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர் நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். மறுநாள் காலை களைப்போடு பாத்ரூம் சென்ற அவர் அங்கு வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் ஜெயச்சந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனை செல்லும்  வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP