பின் வாங்கி விட்டாரா கருணாகரன்?

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் ஆடியோ லாஞ்சில் பேசிய விஷயங்களால், நடிகர் கருணாகரனுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் ட்விட்டரில் சண்டை நடந்தேறியது. இது தொடர்பாக அவர் காவல்துறையில் புகார் அளிப்பார் என சொல்லப் பட்டது.
 | 

பின் வாங்கி விட்டாரா கருணாகரன்?

நடிகர் விஜய் சமீபத்தில் சர்கார் ஆடியோ லாஞ்சில் பேசிய விஷயங்கள் வைரலாகின. விஜய் ரசிகர்கள் இதை வரவேற்றும் அரசியல்வாதிகள் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இதை எதிர்த்தும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வந்தனர். 

இதில் முக்கியமான ஒன்று, நடிகர் கருணாகரனுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் ட்விட்டரில் நடந்தேறிய சண்டை. கருணாகரனின் ட்வீட்டால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்தனர். "ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தை வெளிப்படுத்துகிறது" எறியும் தீயில் மேலும் எண்ணெய் ஊற்றினார் கருணாகரன். 

இந்நிலையில் அதிக கோபமடைந்த விஜய் ரசிகர் ஒருவர், தொலைபேசி வாயிலாக தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக கருணாகரன் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று அவர், புகாரளிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் புகார் கொடுத்தது தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. 

newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP