''அரசியலுக்கு வருவேன்! ஆனா ரஜினியுடன் இணையமாட்டேன்'' சத்யராஜ் மகள் அதிரடி!

''அரசியலுக்கு வருவேன்... ஆனால் கமல், ரஜினியுடன் இணையமாட்டேன்'' - திவ்யா சத்யராஜ்
 | 

''அரசியலுக்கு வருவேன்! ஆனா ரஜினியுடன் இணையமாட்டேன்'' சத்யராஜ் மகள் அதிரடி!

அரசியலுக்கு நான் வருவேன் ஆனால் ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் கமல் கட்சியிலும் இணையமாட்டேன் என்று திவ்யா சத்யாராஜ் கூறியுள்ளார்.

இந்தியாவின் மிகச்சிறந்த ஊட்டச்சத்து நிபுணர்களில் திவ்யா சத்தியராஜ் இடம் பிடித்திருக்கிறார். உலக புகழ் பெற்ற மதிய உணவு திட்டமான ”அக்ஷய பாத்ராவின் விளம்பர தூதுவர். மருத்துவத்துறை முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வு பற்றியும் பிரதமருக்கு திவ்யா எழுதிய கடிதம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. 2019 ஆம் ஆண்டு சிறந்த ஊட்டச்சத்து நிபுணருக்கான இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளார். இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரர் நடிகர் சத்தியராஜின் மகள் திவ்யா சத்தியராஜ் ஆவார். 
''அரசியலுக்கு வருவேன்! ஆனா ரஜினியுடன் இணையமாட்டேன்'' சத்யராஜ் மகள் அதிரடி!

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போது எனது நோக்கம் குறிக்கோள் எல்லாமே ஏழைக் குழந்தைகளின் ஆரோக்கியம் தான் என்கிறார். குழந்தைகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலம். வசதி, வாய்ப்புக்கும் ஆரோக்கியத்துக்கும் எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது. தனது நியூட்ரிசன் படிப்பை வைத்து அரசாங்க பள்ளிகளில் மதிய உணவு முறைகளில் மற்றும் கிராமப்புறங்களிலும் உணவுகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் எந்த மாதிரியான உணவு வகைகள் சேர்க்க வேண்டும் என்றும் தொடர்ந்து ஆலோசனை கொடுத்தும் வருவதாகவும் தெரிவிக்கிறார்.தற்போது தமிழ்நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு இரும்பு சத்து மற்றும் வைட்டமின் 'சி' போதுமானதாக இல்லை, அதை அதிகப்படுத்த வேண்டும் என்று அதற்கான ஆய்வில் ஈடுப்பட்டு வருகிறார். 

''அரசியலுக்கு வருவேன்! ஆனா ரஜினியுடன் இணையமாட்டேன்'' சத்யராஜ் மகள் அதிரடி!

ஈழத்தமிழர்களுக்காகவும் ஊட்டச்சத்து முகாம்கள் நடத்தினேன். ஈழத்தமிழர்களின் சந்தோஷம் தான் என் அப்பாவின் கனவு. ஊட்டச்சத்து நிபுணராக இருப்பதால் தனது முழு கவனமும் சுகாதத்துறை மீது இருக்கிறது என்றார். மேலும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து குறைபாடு உள்ளது. இதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபரேஷன் தியேட்டர்களும், காரிடார்களும் சுத்தமாக இல்லை என பேசினார்.
''அரசியலுக்கு வருவேன்! ஆனா ரஜினியுடன் இணையமாட்டேன்'' சத்யராஜ் மகள் அதிரடி!

அரசியல் ஈடுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த திவ்யா சத்தியராஜ், தான் கண்டிப்பாக விரைவில் அரசியலுக்கு வரப்போவதாகவும் அதற்கான அறிவிப்பு முறைபடி வரும் என்றும் தெரிவித்தார். மேலும்  ரஜினி, கமல் ஆகியோர் கட்சிகளில் சேரக்கூடிய வாய்ப்பு எதாவது இருக்கிறதா..? என்ற கேள்விக்கு தனக்கு கம்யூனிசம் பேசும் நல்லகண்ணு அய்யாவை மிகவும் பிடிக்கும். சாதிய கட்சிகளில் தான் என்றும் போய் சேரமாட்டேன். ரஜினி அங்கிள் கமல் அங்கிளை நடிகர்களாக தான எனக்கு பிடிக்கும். எனவே கண்டிப்பாக அவர்களின் கட்சிகளின் சேரவே மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். தனது அரசியல் பாதை புதியதாக இருக்கும் என்றும் அதை விரைவில் அறிவிக்க போவதாகவும் அவர் தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP