Logo

இளையராஜாவுக்கு 5 1/2 அடி உயரத்தில் கேக் சிலை!

ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள பிரபல தனியாா் இனிப்பகத்தில் வாடிக்கையாளா்களைக் கவரும் வகையில் அவ்வப்போது பிரபலமானவா்களின் உருவம் கேக்கால் வடிவமைப்பது வழக்கம்.
 | 

இளையராஜாவுக்கு 5 1/2 அடி உயரத்தில் கேக் சிலை!

ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள பிரபல தனியாா் இனிப்பகத்தில் வாடிக்கையாளா்களைக் கவரும் வகையில் அவ்வப்போது பிரபலமானவா்களின் உருவங்களை சிலையாக கேக்கில் வடிவமைப்பது வழக்கம். ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்ட சமயங்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக தங்களது கடையின் முன்பு இப்படி பிரபலமானவர்களின் சிலைகளைச் செய்து வைப்பார்கள்.

இளையராஜாவுக்கு 5 1/2 அடி உயரத்தில் கேக் சிலை!

அந்த வகையில், இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இனிப்பகத்தின் முன் ஐந்தரை அடி உயரமுள்ள இளையராஜாவின் உருவத்தை வடிவமைத்துள்ளனா். இதில் இளையராஜா ஜிப்பா, வேட்டி, துளசி மாலை அணிந்து இருப்பது போல அவரது உருவம் வடிவமைக்கப்பட்டு கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவுக்கு 5 1/2 அடி உயரத்தில் கேக் சிலை!

இந்த கேக்கை 5 பணியாளா்கள் 50 கிலோ எடையுள்ள இனிப்புகள் மற்றும் 250 முட்டைகளை பயன்படுத்தி சுமாா் 6 நாள்களாக உருவாக்கியுள்ளதாக கடை உரிமையாளா் சுப்பு சதீஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் அவா் கூறுகையில், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும், சிம்பொனி இசையிலும் சாதனை புரிந்த இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில் கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் கேக் வடிவத்தை கடைக்கு வரும் அனைத்துத் தரப்பு வாடிக்கையாளா்களும் பாா்த்து மகிழ்ச்சியடைந்தனா் என்றாா்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP