ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களில் 28 பேருக்கு ஜாமீன்

கிருஷ்ணகிரியில் பிகில் படத்திற்கு சிறப்பு காட்சிகள் கேட்டு ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களில் 28 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
 | 

ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களில் 28 பேருக்கு ஜாமீன்

கிருஷ்ணகிரியில் பிகில் படத்திற்கு சிறப்பு காட்சிகள் கேட்டு ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களில் 28 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அப்போது, சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியில்லை என்றும், சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். இந்நிலையில், கிருஷ்ணகிரியில் பிகில் படத்திற்கு சிறப்புக்காட்சி வேண்டும் என வலியுறுத்தி விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு பொதுச்சொத்துக்களையும், பொருட்களையும் சேதமாக்கினர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கிருஷ்ணகிரி நகர போலீசார் ரகளையில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 50 பேரில் 28 பேருக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கினார். மேலும், ரகளையின் போது சேதப்படுத்திய ரூ.99 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களுக்காக ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஜாமீனில் வெளிவரும் 28 பேரும், தினமும் காலை 9.30 மணிக்கு கிருஷ்ணகிரி நகர காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP