2.0 - திரை விமர்சனம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜேக்சன் நடிப்பில் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது எந்திரன் 2.0. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும், எல்லோரும் ரசிக்கும் ஒரு எண்டெர்டெயினர்.
 | 

2.0 - திரை விமர்சனம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜேக்சன் நடிப்பில் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது எந்திரன் 2.0. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. 

இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ள 2.0 மீதான எதிர்பார்ப்பு வானளவு. அதை நிறைவேற்றியுள்ளதா 2.0?? வாங்க பார்க்கலாம். 

2.0 - திரை விமர்சனம்

ட்ரெய்லரில் பார்த்ததை போல, மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு ஆபத்து உலகத்தை தாக்கும்போது, அனைவரின் பேவரைட் ரோபோ, சிட்டியின் உதவி தேவைப்படுகிறது. உலகம் முழுவதுமே செல்போன்களுக்கு அடிமையாகி விட்ட நிலையில், செல்போன்களால் பேராபத்து ஏற்படுகிறது. தனது பாணியில், ஒரு சமூக கருத்தையும் இதன் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர். 

படத்தின் முதல் பாதி பயங்கர விறுவிறுப்பாக செல்கிறது. முதல் நிமிடத்தில் இருந்தே, கதையை நோக்கி பயணிக்க துவங்குவதால், படம் சுவாரஸ்யமாக செல்கிறது. ஆக்டிங், பின்னணி இசை, கிராபிக்ஸ் என அனைத்தும் படத்திற்கு வலு சேர்க்கிறது.

2.0 - திரை விமர்சனம்

படத்தின் ப்ளஸ் பாயிண்ட்கள்:

2.0வின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட், 3டி. நவீன 3டி தொழில்நுட்பத்தில் நம்ம ஊரையும், மக்களையும் பார்ப்பது ஒரு புது அனுபவம். படத்தின் மற்றொரு பெரிய ப்ளஸ் பாயிண்ட், கதைக்கு தடை ஏற்படுமாறு பாடல்கள் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, நிரவ் ஷாவின் கேமரா, கிராபிக்ஸ் எல்லாமே வேற லெவலில் உள்ளன. நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ரொம்பவே ஸ்டைலாகவும், கம்பீரமாகவும் காட்சியளிக்கிறார். சில எமோஷனலான காட்சிகளில் அக்ஷய் குமாரும் தூள் கிளப்பியுள்ளார்.

படத்தின் மைனஸ் பாயிண்ட்கள்: 

படத்தின் இரண்டாம் பாதி, பெரிய மைனஸ். முதல் பாதி முழுக்க நடக்கும் சம்பவங்களுக்கு இரண்டாம் பாதியில் இயக்குநர் கொடுக்கும் விளக்கம், ரொம்பவே வேடிக்கையாக உள்ளது. விஞ்ஞானத்தை மையமாகக்கொண்ட படத்தின் அடிப்படை கதையில் கொஞ்சம் கூட விஞ்ஞானமும், லாஜிக்கும் இல்லையென்பது பலருக்கு நெருடலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ரோபோவாக தோன்றும் எமி ஜேக்ஸனுக்கும் சிட்டி ரோபோவுக்கும் இடையே வரும் ரொமான்ஸ் பாகம், லாஜிக் இல்லாதது மட்டுமல்லாமல், கதையிலும் ஒட்டவில்லை. ஷங்கரின் மற்ற க்ளாஸிக் படங்களை ஒப்பிட்டு பார்த்தல், இதில் மையக் கரு ரொம்ப வீக்காகவும், நம்ப முடியாத அளவும் உள்ளது.

2.0 - திரை விமர்சனம்

இவ்வளவு மைனஸ் பாயிண்ட்கள் இருந்தாலும், படம் முதல் காட்சியிலிருந்து க்ளைமேக்ஸ் வரை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் செல்வதால், தொய்வு ஏற்படுவதில்லை. சில இடங்களில் லாஜிக்கை மிஸ் செய்தாலும், படம் பார்க்க பிரம்மாண்டமாகவும், ரசிக்கக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது. அட்டகாசமான 3டி-யை நிச்சயம் தியேட்டரில் பார்த்தால் தான் முழு அனுபவம் கிடைக்கும். எந்திரன் 2.0, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும், நிச்சயம் எல்லோரும் ரசிக்கும் ஒரு எண்டெர்டெயினர். 

நம்ம ரேட்டிங்: 3/5

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP