தோனி முதுகில் குத்திய யுவராஜ் சிங்! ரசிகர்கள் அதிர்ச்சி!!

தோனி முதுகில் குத்திய யுவராஜ் சிங்! ரசிகர்கள் அதிர்ச்சி!!

தோனி முதுகில் குத்திய யுவராஜ் சிங்! ரசிகர்கள் அதிர்ச்சி!!
X

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் தோனி வேறுவழியின்றி தன்னை அணியில் சேர்த்ததாக யுவராஜ் சிங் கூறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுவராஜ் சிங், 2011ஆம் ஆண்டு தான் இந்திய அணியில் சேர்க்கப்பட்டது தொடர்பாக மனம்திறந்துள்ளார். அனைத்து கேப்டன்களுக்கும் தங்களுக்கு பிடித்தமான வீரரை அணிக்குள் கொண்டு வரவே விருப்பம் இருக்கும் என்றும் அந்த வகையில், சுரேஷ் ரெய்னாவிற்கு பெரிய ஆதரவு இருந்தது என்றும்,  அவரை அணிக்குள் கொண்டுவர தோனி விரும்பினார் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


அந்த சமயத்தில் யூசுஃப் பதானும் நன்றாக விளையாடினார் என்றும் மற்றொரு புறம் தான் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக பங்காற்றினேன் எனவும், ஆனால் ரெய்னா சிறப்பாக விளையாடவில்லை என தெரிவித்துள்ளா். அதனால் வேறுவழியின்றி தோனி தன்னை அணிக்குள் சேர்த்ததாக .யுவராஜ் கூறியுள்ளார். யுவராஜ் சிங்கின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் எதிரான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it