முழு ஊரடங்கு வாகன சோதனையில் ரூ.1 கோடியுடன் சிக்கிய இளைஞர்.. போலீசார் அதிர்ச்சி !

முழு ஊரடங்கு வாகன சோதனையில் ரூ.1 கோடியுடன் சிக்கிய இளைஞர்.. போலீசார் அதிர்ச்சி !

முழு ஊரடங்கு வாகன சோதனையில் ரூ.1 கோடியுடன் சிக்கிய இளைஞர்.. போலீசார் அதிர்ச்சி !
X

சென்னையில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி சேவியர் தெரு பிரகாசம் சாலை சந்திப்பில் முத்தியால் பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் பைக்கில் வேகமாக வந்த இளைஞர் ஒருவரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது அவரது வாகனத்தில் கட்டு கட்டாக பணம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதில் ரூ.99 லட்சத்து 50ஆயிரம் பணம் இருந்தது. 

பின்னர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மண்ணடி நைனியப்பன் தெருவை சேர்ந்த நத்தர் சாஹிப்(35) என்பது தெரியவந்தது.

மண்ணடி பவளக்காரன் தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இர்பான் என்பவர் கொடுத்தனுப்பிய இந்த பணத்தை தையப்பன் தெருவில் போய் நின்றால் ஒருவர் வாங்கி கொள்வார் என்று கூறி கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.

அங்கு போகும் வழியில் போலீசாரிடம் நத்தர் சிக்கினார். இந்த பணம் ஹவாலா பணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.

newstm.in 

Next Story
Share it