கொய்யாப் பழம் விற்பனை செய்வதில் போட்டி.. இளைஞர் வாகனம் ஏற்றி கொலை !

கொய்யாப் பழம் விற்பனை செய்வதில் போட்டி.. இளைஞர் வாகனம் ஏற்றி கொலை !

கொய்யாப் பழம் விற்பனை செய்வதில் போட்டி.. இளைஞர் வாகனம் ஏற்றி கொலை !
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அய்யனார்வூத்து கிராமம் அருகே செல்லும் சாலையில் லோடு ஆட்டோ - பைக் மோதி ஒருவர் இறந்துக் கிடப்பதாக கயத்தார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையெடுத்து கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்து கிடந்தவரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் இறந்தவர் விளாத்திகுளம் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி (32) என்றும் அவர் கொய்யாப்பழ வியாபாரி எனவும் தெரிய வந்தது.

போலீசார் லோடு ஆட்டோவைப் பார்வையிட்டபோது ஆட்டோவின் நம்பர் மற்றும் சைடு பகுதியில் எழுதப்பட்டவைகள் அனைத்தும் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டிருந்தன. இதனால் விபத்து பற்றி சந்தேகம் ஏற்பட்டது.

அதன் பின்னர் தீவிர விசாரணை நடத்தியதில் விபத்து ஏற்படுத்தியது போல் நம்ப வைத்து, ஆட்டோவால் முத்துபாண்டி பைக் மீது மோதவிட்டு கொலை செய்தது தெரியவந்தது.

மேலும், தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்பகையால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தியதில், கொய்யாப்பழ வியாபாரியான கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த பசுபதி பாண்டியன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

முத்துப்பாண்டிக்கும், பசுபதி பாண்டியனுக்கும் கோவில்பட்டி பசுவந்தனை ரோட்டில் கொய்யாப் பழம் விற்பது சம்பந்தமாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்துள்ளது. 

இதனால் ஏற்பட்ட முன்பகையில் முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அதேநேரத்தில் தலைமறைவான பசுபதி பாண்டியனை தேடி வருகின்றனர்.

newstm.in 

Next Story
Share it