மருந்து வாங்க வெளியே வந்த இளைஞர் பலி! காவல்துறையே காரணம்!!

மருந்து வாங்க வெளியே வந்த இளைஞர் பலி! காவல்துறையே காரணம்!!

மருந்து வாங்க வெளியே வந்த இளைஞர் பலி! காவல்துறையே காரணம்!!
X

ஆந்திரா மாநிலம் குண்டூரில் மெடிக்கலுக்கு மருந்து வாங்க வெளியே இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முகமது கவுஸ் என்ற இளைஞர் மருந்து வாங்க இருசக்கர வாகனத்தில் சென்ற போது தடுத்து நிறுத்திய காவல்துறை அவரை ஓரமாக உட்கார வைத்தனர். இதயநோயாளியான அந்த நபரின் உடல்முழுவதும் வியர்த்துக் கொட்டியுள்ளது. இதனையடுத்து உறவினர் வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அவரது சடலத்துடன் சாலையில் போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அந்தத் தொகுதி எம்.எல்.ஏ அம்பாதி ராம்பாபு மற்றும் உயர்காவல் அதிகாரிகள், பொதுமக்களை சமாதானம் செய்து கூட்டத்தைக் கலைத்தனர்.

newstm.in

Next Story
Share it