தஞ்சையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!

தஞ்சையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!

தஞ்சையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!
X

தஞ்சாவூரில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் ஜோசன் என்கிற யூசுப் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கும்பல் திடீரென காரை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த யூசுப் காரை சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி நிறுத்தியுள்ளார். அப்போது காரை விட்டு இறங்கிய யூசுப்பை மர்ம கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஓடஓட வெட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஜோசப் என்கிற இயற்பெயரை கொண்ட இவர் குவைத்தில் அசிலா என்ற பெண்ணை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மதம் மாறி தன் பெயரை யூசுப் என மாற்றிக்கொண்டார். இருவரும் தஞ்சையில் வசித்து வந்த நிலையில், அசிலாவின் சொத்துக்களை கேட்டு யூசுப் பிரச்னை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் அசிலா யூசுப் மீது இரண்டு முறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் யூசுப் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it