காதல் திருமணத்துக்கு உதவிய இளைஞர் கொலை... அதிமுக செயலரை தேடும் காவல்துறை!

காதல் திருமணத்துக்கு உதவிய இளைஞர் கொலை... அதிமுக செயலரை தேடும் காவல்துறை!

காதல் திருமணத்துக்கு உதவிய இளைஞர் கொலை... அதிமுக செயலரை தேடும் காவல்துறை!
X

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர அதிமுக செயலர் விஜயனின் மகள் ஓராண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இதற்கு மதுரை பிபி.குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உதவினார். இதனால் இவருக்கும், விஜயனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் மணிகண்டன் கடந்த 7ஆம் தேதி திருமங்கலத்தில் உள்ள தனது அத்தை வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, செக்கானூரணி அருகே கொலை செய்யப்பட்டார். மணிகண்டன் மனைவி தீபிகா கொடுத்த புகாரின்பேரில், காவல்துறையினர் திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல், பிரகாஷ், விஜயன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். சக்திவேல் கைது செய்யப் பட்டார். தஞ்சாவூர் நீதிமன்றத்தில் பிரகாஷ் சரண் அடைந்தார். தலைமறைவான அதிமுக நகரச் செயலர் விஜயனை காவல் ஆய்வாளர் அனிதா தலைமையிலான தனிப்படையினர் தேடிவருகின்றனர். 

newstm.in

Next Story
Share it