1. Home
  2. தமிழ்நாடு

கடலூர் அருகே மாடு முட்டியதில் பைக்கில் சென்ற இளைஞர் உயிரிழப்பு..!

1

விழுப்புரத்தை சேர்ந்தவர் ராஜதுரை (26).இவர்  நெல் அறுவடை இயந்திரத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், ராஜதுரை நேற்று (அக்.20) இரவு இரு சக்கர வாகனத்தில் கடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பைக் நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் சென்று கொண்டிருந்த மாடு திடீரென அவரை முட்டி தூக்கியுள்ளதாகத் தெரிகிறது. அப்போது, மாட்டின் கொம்பு ராஜதுரை வயிற்றுப்பகுதியில் குத்தியதில், ரத்த வெள்ளத்தில் குடல் சரிந்து கீழே விழுந்துள்ளார். மேலும், பலத்த காயமடைந்த ராஜதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெல்லிக்குப்பம் போலீசார், உயிரிழந்த ராஜதுரை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Trending News

Latest News

You May Like