முதலமைச்சரை மீம்ஸ் போட்டு , கலாய்த்ததால் இளைஞர் கைது !!

முதலமைச்சரை மீம்ஸ் போட்டு , கலாய்த்ததால் இளைஞர் கைது !!

முதலமைச்சரை மீம்ஸ் போட்டு , கலாய்த்ததால் இளைஞர் கைது !!
X

தெலுங்கானா முதலமைச்சர் மற்றும் பிற அரசியல் தலைவர்களை அவதூறாக பேஸ்புக்கில் பாலச்சந்தர் (24 ) மிகவும் கேவலமான , கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது தெலுங்கானா மக்களின் உருவத்தையும் தனிப்பட்ட உணர்வுகளையும் பாதித்துள்ளது.

சைபர் கிரைம் காவலர் ரமேஷின் புகாரின் பேரில், ஜூன் 12 அன்று இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 501,504,505 மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67’ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட பாலச்சந்தர் “ஸ்பிரிட் ஆஃப் தெலுங்கானா” என்ற பேஸ்புக் பக்கத்தை நடத்தி வருகிறார். காவல்துறையினரின் கூறுவது போல் , ஜூன் 10 அன்று முதல்வர் மற்றும் சில தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர்களின் சில படங்களை பதிவிறக்கம் செய்து ,

அவதூறான மற்றும் கேவலமான கருத்துக்களுடன் திருத்தி, முதலமைச்சரை அவதூறு செய்வதற்காக வேண்டுமென்றே தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார் என்று கூறப்படுகிறது. தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், பாலச்சந்தரை ராச்சகொண்டா சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newstm.in

Next Story
Share it