1. Home
  2. தமிழ்நாடு

வெளியே சுற்றிய இளைஞர்கள்! கிராமங்களில் நடத்தப்படும் போட்டியே தண்டனை!!

வெளியே சுற்றிய இளைஞர்கள்! கிராமங்களில் நடத்தப்படும் போட்டியே தண்டனை!!


ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய இளைஞர்களுக்கு சென்னை காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கினர்.

புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு சந்திப்பில் துணை ஆணையாளர் சுப்புலட்சுமி தலைமையில், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவையின்றி வெளியே வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், ஊர் சுற்றித் திரிந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு ஒரு டம்ளரில் இருந்து ஸ்பூன் மூலம் மற்றொரு டம்ளரில் நீரை நிரப்பும் நூதன தண்டனை வழங்கப்பட்டது. மேலும், டம்ளரில் நீரை நிரப்பும் வரை வீட்டிலிருந்து வெளியே செல்ல மாட்டோம் எனக்கூறிய படி இளைஞர்கள் டம்ளரில் நீரை நிரப்பினர். 

சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாவதை தொடர்ந்து, பொது இடங்களில் யாரும் சுற்றக்கூடாது என காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமங்களில் திருவிழா மற்றும் பொங்கல் பண்டிகையின் போது கையால் தண்ணீர் அள்ளி நடந்துவந்து பாத்திரத்தில் நிரப்புவது, ஸ்பூனால் தண்ணீர் கொண்டு வந்து ட்ம்ளரை நிரப்புவது என போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதைப்போல சென்னை காவல்துறையினர் தண்டனை வழங்கியுள்ளனர். 

newstm.in

Trending News

Latest News

You May Like