இளைஞரின் தலைக்கேறிய போதை.. ஒரே சுத்தியல்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி, குழந்தைகள் !

இளைஞரின் தலைக்கேறிய போதை.. ஒரே சுத்தியல்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி, குழந்தைகள் !

இளைஞரின் தலைக்கேறிய போதை.. ஒரே சுத்தியல்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி, குழந்தைகள் !
X

டெல்லி புறநகரில் உள்ள ஷிவ் பார்க் குடியிருப்பு வளாகத்தில் பிரீத்தி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த மாதம் குடியேறியுள்ளனர். பிரீத்தியின் கணவர் ககன் மதுபோதைக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. 

இதனால் குடும்பத்தில் அடிக்கடை சண்டை ஏற்பட்டதால் தனது பெற்றோர் வசிக்கும் பகுதியான ஷிவ் பார்க் குடியிருப்புக்கு ப்ரீத்தி குடிசென்றார்.

இந்நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ககன் வழக்கம்போல் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். சண்டை முற்றியதால் மனைவி ப்ரீத்தி மற்றும் 2 குழந்தைகளை ககன் சுத்தியலால் கொடூரமாக தாக்கியுள்ளார். 

இதில் படுகாயமடைந்த ப்ரீத்தி ரத்தவெள்ளத்தில் சரிந்து வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மகளுக்கு ஏதே விபரீதம் நடப்பதை உணர்ந்த ப்ரீத்தியின் பெற்றோர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 வயது மகன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், 5 வயது மகள் தாக்கப்பட்டும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். இந்த கொடூர கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உடல்களை மீட்ட போலீசார் தப்பியோடிய ககனை தீவிரமாக தேடி வருகின்றனர்


newstm.in 


 

Next Story
Share it