தீராத டிக்டாக் மோகம்.. உயிருடன் மீனை விழுங்க முயன்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் !

தீராத டிக்டாக் மோகம்.. உயிருடன் மீனை விழுங்க முயன்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் !

தீராத டிக்டாக் மோகம்.. உயிருடன் மீனை விழுங்க முயன்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் !
X

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் வெற்றிவேல். 24 வயதான இவர் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், ஒரு குழந்தை உள்ளது. அவரது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.      

வெற்றிவேல் டிக்டாக் மற்றும் லைக்கீ செயலிகளில் அதிக மோகம் கொண்டனர். இதனால் புதிது புதிதாக எதாவது செய்து அதன் வீடியோக்கள் பதிவிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அதிக லைக்குகள் பெற வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி கடந்த புதன்கிழமை மாலை தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு, ஓசூர் தேர்ப்பேட்டையில் உள்ள பச்சை குளத்தில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது வெற்றிவேல் மதுபோதையில் இருந்ததால் அவருக்கு ஒரு விரீத யோசனை தோன்றியுள்ளது.

அதையடுத்து அங்கு பிடித்த ஒரு மீனை உயிருடன் விழுங்கப் போவதாகவும் அதை வீடியோவாக எடுக்கும்படியும் நண்பர்களிடம் கூறியுள்ளார். போதையில் இருந்த நண்பர்களும் சம்மதிக்கவே, குளத்தில் பிடித்த ஒரு மீனை அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்க முயன்றுள்ளார் வெற்றிவேல்.

அப்போது மீன் தொண்டையில் அடைத்துக் கொண்டதால் வெற்றிவேல் மூச்சுவிட முடியாமல், மயங்கி சரிந்து விழுந்தார். நண்பர்கள் அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மதுபோதையில் மீனை விழுங்கி டிக் - டாக்-ல் அதிக லைக்குகளை பெற நினைத்து விளையாட்டாக செய்த செயலால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் ஓசூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in 

Next Story
Share it