இளம் பெண்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை !! கணவனை மீட்டு தர மனைவி புகார் !!

இளம் பெண்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை !! கணவனை மீட்டு தர மனைவி புகார் !!

இளம் பெண்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை !! கணவனை மீட்டு தர மனைவி புகார் !!
X

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குழிவிளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ( 39). தனியார் மினிபேருந்து ஓட்டுனரான இவர், கடந்த 19 வருடங்களுக்கு முன்பு பளுகல் பகுதியை சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு 19,17வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது உண்மையான பெயரை மறைத்து பல்வேறு போலி பெயர்களை கூறி மினி பேருந்தில் பயணிகளாக வரும் கல்லூரி மாணவிகளை தன் பேச்சு திறமையால் மயக்கி காதலித்து பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளான்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மடிச்சல் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் அந்த மாணவியின் ஏழ்மையை பயன்படுத்தி திருமணம் செய்யாமலேயே வாழ்கை நடத்தி வருகிறான்.

சிறிது சிறிதாக முற்றிலும் மனைவியிடம் தொடர்புகளை துண்டித்த மணிகண்டன் மேலும் பல கல்லூரி பெண்களுடன் பழகி வருவதாக கிடைத்த தகவலின் படி, பளுகல் காவல்துறை, களியக்காவிளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் என புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மனமுடைந்த மனைவி , கணவனின் கள்ள காதலியான கல்லூரி மாணவி வீட்டின் முன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது எனது கணவருக்கு உனது வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரை விட்டு விடு என்று அந்த கல்லூரி மாணவியிடம் சுகந்தி முறையிட்டதோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

அப்போது இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்கவே இருவரையும், மாணவியின் பெற்றோரையும் களியக்காவிளை காவல்நிலையத்தில் அழைத்து வந்து அங்கிருந்து குழித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it