அமிதாப், அபிஷேக் புகைப்படங்களை பகிர்ந்த WWE சூப்பர் ஸ்டார்!

அமிதாப், அபிஷேக் புகைப்படங்களை பகிர்ந்த WWE சூப்பர் ஸ்டார்!

அமிதாப், அபிஷேக் புகைப்படங்களை பகிர்ந்த WWE சூப்பர் ஸ்டார்!
X

WWE சூப்பர் ஸ்டாரான ஜான் சீனா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக், ஐஷ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமிதாப் குடும்பத்தினர் விரைவில் குணமடைய வேண்டுமென பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் WWE சூப்பர் ஸ்டாரான ஜான் சீனா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் ஜான்சீனாவுக்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.

இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வரும் ஜான்சீனா, அவ்வப்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் இந்திய செலிபிரிட்டிகள் தொடர்பாக புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். சுஷாந்த் சிங் ராஜ்புட், ரிஷி கபூர் ஆகியோரின் புகைப்படங்களையும் அவர் ஏற்கெனவே பகிர்ந்துள்ளார். எந்த தலைப்பும் இடாமல் புகைப்படத்தை மட்டுமே பகிர்வதை ஜான்சீனா வழக்கமாக கொண்டுள்ளார்.
 

newstm.in

Next Story
Share it