1. Home
  2. தமிழ்நாடு

மோசமடைந்த காற்றின் தரம்..! பல இடங்களில் 100ஐ தாண்டியது காற்றின் தரக்குறியீடு..!

1

சென்னையில் உள்ள சாலைகள் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. சென்னையின் அனைத்து இடங்களிலும் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியது.  காற்றின் தரக் குறியீடு மணலியில் 325 ஆகவும், ஆலந்தூரில் 263 ஆகவும், வேளச்சேரியில் 314 ஆகவும், அரும்பாக்கத்தில் 256 ஆகவும், ராயபுரத்தில் 234 ஆகவும், அசோக் நகர் ஸ்ரீதேவி காலனியில் -147, கொடுங்கையூர் பகுதியில் - 150 என்ற அளவை தாண்டிச் சென்றது. 

அதேபோல், கும்மிடிப்பூண்டியில் 255 ஆகவும், செங்கல்பட்டுவில் 231 ஆகவும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. மேலும், வேலூரில் 180 ஆகவும், கடலூரில் 175 ஆகவும், புதுச்சேரியில் 164 ஆகவும், சேலத்தில் 142 ஆகவும் காற்று மாசு அதிகரித்துள்ளது.

இதனிடையே, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்ததாக, இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்தல், 125 டெசிபல் அளவுக்கு மேல்ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்தது, அனுமதி இல்லாத இடங்களில் பட்டாசுகள் வெடித்தது உள்ளிட்ட விதிமுறைகளை மீறியதாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

காற்றின் தரக் குறியீடு

• 0-50 - நல்லது!

• 51-100 - இயல்பானது!

• 51-150 - ஏற்கனவே உடல்நலக்குறைவு இருப்போருக்கு ஆபத்து!

• 151-200 - ஆரோக்கியமற்றது!

• 201-300 - மிகவும் ஆரோக்கியமற்றது!

• 301-500 - அபாயகரமானது!

Trending News

Latest News

You May Like