பெண்ணின் மார்பகம் அவரது உயிரையே காப்பாற்றி உள்ளது !! எப்படி ?

பெண்ணின் மார்பகம் அவரது உயிரையே காப்பாற்றி உள்ளது !! எப்படி ?

பெண்ணின் மார்பகம் அவரது உயிரையே காப்பாற்றி உள்ளது !! எப்படி ?
X

கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் காலையில் வாக்கிங் சென்றுள்ளார்.அப்போது திடீரென அவரது மார்பகத்தில் லேசாக வலி எடுத்துள்ளது. இதனால், பக்கவாட்டில் தொட்டுப் பார்த்துள்ளார்.அப்போது அங்கு ரத்தம் வந்துக் கொண்டிருந்தது.

இதனால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் மார்பகத்தில் வலி எடுப்பதாகவும், ரத்தம் வந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மருத்துவர்கள் உடனடியாக குறித்த பெண்மணியை பரிசோதனை செய்தனர்.

அப்போது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது  அந்த பெண்மணியின் இடது மார்பகத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.குண்டு ஊடுருவ முடியாமல் மின்னல் வேகத்தில் திரும்பியதில் வலது மார்பகத்தில் பாய்ந்து நின்றிருந்தது.

இதற்கு காரணம், அவரது மார்பகங்கள் செயற்கையாக பொருத்தப்பட்ட சிலிகான் மார்பகங்களாகும். 2018 - ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் குறித்த பெண்மணி காலையில் நடைப்பயிற்சிக்கு செல்லும் வேளையில், அங்கு இருந்தவர்களுக்குள் சண்டை நடந்து யாராவது ஒருவர் துப்பாக்கியால் சுட்டிருக்க வேண்டும்.

அந்த குண்டு அவரது மார்பகத்தை நோக்கி பாய்ந்துள்ளது. ஆனால், அவர் செய்த அதிர்ஷ்டம் அந்த குண்டு செயற்கை மார்பகத்தில் பட்டு தெறித்துள்ளது. செயற்கை மார்பகம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நேரடியாக குண்டு மார்பகம் வழியாக நெஞ்சுக்குள் புகுந்து முக்கிய உறுப்புகளை சிதைத்திருக்கும்.மட்டுமின்றி அவரது உயிருக்கு அது ஆபத்தாகவும் முடிந்திருக்கும் என அந்த மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

Newstm.in

Next Story
Share it