வாட்ஸ் அப்பில் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய நபர் !! இது தான் காரணமாம் ....

வாட்ஸ் அப்பில் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய நபர் !! இது தான் காரணமாம் ....

வாட்ஸ் அப்பில் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய நபர் !! இது தான் காரணமாம் ....
X

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் ரோஸ். இவரது செல்போனுக்கு கடந்த ஞாயிறு அன்று மதியம் ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் இருந்து பேசியவர் தன்னை ஒரு வங்கி அதிகாரி எனவும் வங்கியின் ஏடிஎம் கார்டு எண்களை தர வேண்டும் எனவும் வங்கி கணக்கு தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரோஸ்  கடந்த ஆண்டு இதே போன்ற திருட்டு கும்பலிடம் ஒரு முறை ஏற்கனவே எ.டி.எம். எண்ணை கூறி எட்டாயிரம் ரூபாயை இழந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் எ.டி.எம். எண்ணை கொடுத்து ஏமாந்து விட கூடாது என்பதில்  உஷாரான அந்தப் பெண்மணி ஞாயிற்றுக்கிழமை எந்த வங்கி செயல்படுகிறது எனவும் நீங்கள் உண்மையில் அதிகாரியா ?

என கேட்டு,  கோபத்தோடு திட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து  அழைப்பை துண்டித்த  அந்த மர்ம நபர், அடுத்த நிமிடமே  இவரது செல்போன் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே குளச்சல் வட்டாரத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் ஏடிஎம் கார்டு தொடர்பாக வட இந்தியாவிலிருந்து வந்த செல்போன் அழைப்பின் பேரில் ஏடிஎம் கார்டு எண்களை கூறியதால் ஆயிரக்கணக்கான பணங்களை இழந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏடிஎம் கார்டு மூலம் அப்பாவி மக்களின் பணங்களை கொள்ளையடிப்பது வாடிக்கையாகி விட்டது இது தொடர்பாக காவல் துறையும் அரசும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newstm.in

Next Story
Share it