கேரட் நறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய பெண்... உடல் 2 துண்டான கொடூரம்!

கேரட் நறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய பெண்... உடல் 2 துண்டான கொடூரம்!

கேரட் நறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய பெண்... உடல் 2 துண்டான கொடூரம்!
X

நீலகிரியில் கேரட் சுத்திகரிப்பு இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பாலாடா என்ற கிராமத்தில் தொழிலாளர்கள் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது 18 வயது இளம்பெண் ஒருவர் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். உடனே சக தொழிலாளர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்தவுடன் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எந்தவித நேர கட்டுப்பாடு இல்லாமல் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்து வருவதால் உடல் அயர்ச்சியினால் தவித்து வருவதாக தெரியவந்துள்ளது. இறந்துபோன இளம் வேலைக்கு சேர்ந்து சில வாரங்களே இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நீலகிரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it