பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. திருமணத்திற்கு பெண் கேட்டுவந்த கும்பல் அட்டகாசம் !

பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. திருமணத்திற்கு பெண் கேட்டுவந்த கும்பல் அட்டகாசம் !

பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. திருமணத்திற்கு பெண் கேட்டுவந்த கும்பல் அட்டகாசம் !
X

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். கேரளாவைச் சேர்ந்த இவர் சமீபத்தில் வெளியான கொடிவீரன், சவரக்கத்தி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவரது தாயார் கொச்சி நகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

அதில், நடிகை பூர்ணாவின் வீட்டுக்கு திருமணம் தொடர்பாக 4 பேர் பேச வந்ததாகவும், அவர்கள் தங்களை மணமகன் தரப்பு உறவினர்கள் என்று கூறி வீட்டை புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பூர்ணாவிடம் ரூ.1 லட்சம் கேட்டு வருவதாகவும், கொடுக்கவில்லை என்றால் தீர்த்துக் கட்டிவிடுவோம் என்று மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸ் வடநபில்லியைச் சேர்ந்த ரபீக் (30), கடவன்னூரைச் சேர்ந்த ரமேஷ் (35), கைபமங்கலத்தைச் சேர்ந்த ஷரத் (25), சேட்டுவாவைச் சேர்ந்த அஷ்ரப் (52) ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.
  
கைதான இந்த 4 பேர் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் வந்திருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த நால்வரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

newstm.in 

Next Story
Share it