மருத்துவமனையில் அத்துமீறிய இளைஞர்.. செருப்படி கொடுத்த பெண் !

மருத்துவமனையில் அத்துமீறிய இளைஞர்.. செருப்படி கொடுத்த பெண் !

மருத்துவமனையில் அத்துமீறிய இளைஞர்.. செருப்படி கொடுத்த பெண் !
X

அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஒருவரை பெண் ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   

வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு எதிரில் உள்ள இடத்தில் பிரசவ சிகிச்சைக்காகவும், பிற நோய்களுக்காகவும் ஏராளனமான நோயாளிகள் காத்திருப்பது வழக்கம். அந்த வகையில் அங்கு காத்திருந்த ஒரு 40 வயதுடைய பெண்ணை இளைஞர் ஒருவர் நோட்டமிட்டுள்ளார்.

அதன் பின்னர் அப்பெண்ணிடம் அவர் தவறான முறையில் சைகை காட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை பிடித்து செருப்பால் அடித்தார். 

பின்னர் அங்கு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தியநிலையில், அப்போது அவரிடம் அந்நபரை அப்பெண் ஒப்படைத்தார். இதனையடுத்து காவலர்கள் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்க்கொண்டனர்.

இந்த விசாரணையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கண்ணமங்கலம் அடுத்த கம்பம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இளைஞரை பெண் ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

newstm.in 

Next Story
Share it