1. Home
  2. தமிழ்நாடு

இன்று இரவு விரதமிருந்தா இத்தனை பலன்கள் கிடைக்குமா?! மிஸ் பண்ணாதீங்க!

இன்று இரவு விரதமிருந்தா இத்தனை பலன்கள் கிடைக்குமா?! மிஸ் பண்ணாதீங்க!

பொதுவாகவே வியாழக்கிழமை என்பது குருவுக்கு உகந்த தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம் வாழ்வின் ஞானகுருவான சிவபெருமானை இந்த வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்து வணங்கிட முன் ஜென்ம வினைகள், பாவங்கள் விலகும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு.

அன்னையர்க்கு உகந்தது ஒன்பது நாட்கள் நவராத்திரி திருவிழா.சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. மாசி மாதம் மகா சிவராத்திரி அனைத்து சிவ ஆலயங்களிலும் நான்கு கால பூஜைகளுடன் விடிய விடிய அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.

இன்றைய தினம் காலை முதலே சிவ ஆலயங்கள் களை கட்டத் தொடங்கி விட்டன. நாடு முழுவதும் அனைத்து சிவ ஆலயங்களிலும் நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் நடை மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகல்வரை திறக்கப்பட்டிருக்கும்.

வியாழக்கிழமையில் சிவனை வழிபடுவது சிறப்பு. அதுவும் மகாசிவராத்திரி நாள் வியாழக்கிழமை வருவதால் ஞானகுருவாக போற்றப்படும் சிவபெருமானை அபிஷேகம் செய்து வழிபட்டால் பலவித யோகங்களும் கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினை விலகும். ஆரோக்கியம் கைகூடும்.

சிவபெருமானின் லிங்கத்திருமேனிக்கு பால், தயிர், திரவியப் பொடி, அரிசிமாவு, தேன், விபூதி, சந்தனம், நெல்லிப்பொடி முதலான அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். சிவனை அலங்கரிக்க வில்வம், செவ்வரளி, மல்லி, முல்லை முதலான மலர்களை வாங்கிக் கொடுக்கலாம். மனதில் நிம்மதியும் குடும்பத்தில் சந்தோஷமும் அதிகரிக்கும்.

சிவ ஆலயத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் பூஜைகளை தரிசனம் செய்தால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். நமச்சிவாய மந்திரத்தை நாள்முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கலாம். விடிய விடிய கண்விழித்து அபிஷேக ஆராதனைகளை தரிசனம் செய்பவர்கள் குபேர வாழ்வு வாழலாம். எதுவுமே வாங்கித்தர வசதியில்லையே என்று ஏங்குபவர்களுக்கு ஒரே ஒரு இலை வில்வம் வாங்கிக் கொடுத்தாலே பல பிறவிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

Trending News

Latest News

You May Like